Friday, December 30, 2016

வெண் குஷ்டம் என்ற வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான நிருபிக்கப் பட்ட வீட்டு வைத்தியம் .!!!

உள் மருந்தாக
காலையில் வெறும் வயிற்றில்
ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொழுந்து,
சம அளவு கீழாநெல்லி கொழுந்துடன்
சேர்த்து
மெதுவாக மென்று விழுங்க வேண்டும்
.நீர் அதிகமாக அருந்த வேண்டும்
,
உணவை குறைத்து பழங்கள் அதிக அளவு எடுக்கவும்
வெளி மருந்து (மேற் பூச்சு மருந்து )
௧) வேப்பம் கொழுந்து
௨)கஸ்துரி மஞ்சள்
.௩) நாட்டுப் பசு மோர் (வீட்டில் தயாரித்தது)
வேப்பம் கொழுந்து மற்றும் கஸ்துரி மஞ்சள் சம அளவு எடுத்து கொண்டு
தேவையான அளவு வீட்டில் தயார் செய்த நாட்டுப் பசு மோர் மோர் விட்டு
அம்மி கல்லில் நன்றாக மை போல அரைத்து
காலை பொழுது (6 முதல் 8 க்குள்)
பாதிப்பு உள்ள இடங்களிலும்
,விருப்பம் இருந்தால்
மற்ற இடங்களிலும் தடவி
இளம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும்,
இது போல 90 நாட்கள் செய்தால்
வெண்புள்ளிகள் மறைந்து
இயல்பு நிலைக்கு உடலின் நிறம் வந்துவிடும்,
பாதிப்புகள் அதிகமாக இருந்தால்
சற்று கால தாமதம் ஏற்படும்
ஆனால் நிச்சயமாக குணமாகிவிடும்.
.உள் பிரயோகம் மற்றும் வெளிபிரயோகம் இரண்டையும் சேர்த்தும் செய்யலாம்
தக்காளி,புளி, வெங்காயம், வாழைப்பழம்,ஆப்பிள் பிரெட்,கார்ன் புட்ஸ்
,வைட்டமின் “C” உள்ள பொருள்கள்,கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு,
அசைவம்,வெள்ளை சர்க்கரை ,ஊறுகாய்,மைதா
மற்றும் மைதாவில் செய்த உணவு பொருள்களை சேர்க்க கூடாது.
வெள்ளை சர்க்கரை கண்டிப்பாக பயன் படுத்தக் கூடாது
எந்தவித side-effect வும் ஏற்ப்படுத்தாது.
======================================================
வெண்படையைப் போக்கும் அருமையான மருந்து!!!
.வெண்குட்டம் என்றும், வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா (Luecoderma) எனப்படு...கிறது. மெலனின் குறைபாட்டால்தான் இந்த நோய் வருகின்றது. இதை நோய் என்று சொல்வது கூட சரியல்ல. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அளவில் படும் துன்பம் மிக அதிகம். சமூக ரீதியாக இது குறித்த விழிப்புணர்வு அறவே இல்லை.
* கருவேலம்பட்டைப் பொடி- 100 கிராம் * கீழாநெல்லிப் பொடி- 100 கிராம்இவை இரண்டையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து அரை லிட்டராக சுண்டும் அளவுக்கு நன்கு கொதிக்க வைக்கவும்.
பிறகு அதை வடிகட்டி, இத்துடன்* வெந்தயப் பொடி- 80 கிராம்
கலந்து, வெய்யிலில் வைக்கவும். நீரெல்லாம் சுண்டிப் போகும் வரை வெய்யிலில் வைக்கவும். இறுதியில் வண்டல் போல மிஞ்சும் சூரணத்தை நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
இந்தச் சூரணத்தை 500 மி.கி. அளவு எடுத்து, காலை உணவுக்கு முன், தண்ணீரில் கலந்து சாப்பிட வெண்படை குணமாகும்.
மருந்துண்ணும் போது அகத்திக்கீரை, பாகற்காய், சிறுகீரை ஆகியவற்றையும், கருவாட்டையும் சேர்க்கலாகாது.
முக்கியமான விஷயம் என்னவென்றால் உணவில் புளிப்பு தவிர்க்கப்படவேண்டும்
=========================================
வெண்புள்ளிக்கு சித்த மருத்துவம்!!!
நம் உடலைப் போர்த்தியிருக்கும் சருமத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பான நிறம் மாறி, வெள்ளை நிறம் தோன்றுவதை வெண்புள்ளி என்கிறோம். இது மெலனின் என்ற நிறமிக் குறைபாட்டால் ஏற்படுகிறது. வெவ்வேறு அளவுகள், வடிவங்களில் இருக்கும்.
இந்தப் புள்ளிகள் முதலில் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும் பரவும். நிச்சயமாக, இது தொற்று நோய் அல்ல.
காரணங்கள்:
உணவில் புரதம் மற்றும் வைட்டமின் குறைபாடு
வயிற்றில் உள்ள கிருமிகள்
நாட்பட்ட வயிற்றுக் கோளாறுகள்
ஹார்மோன் பாதிப்பு
மன அழுத்தம்
நோய்வாய்ப்பட்ட நிலை
அமீபியாசிஸ்
venpulli disease in tamil tips,venpulli maruthuvam
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்
கார்போக அரிசியைப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து உண்ணலாம்.
காட்டுச் சீரகப் பொடி, மிளகுத் தூள் சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடலாம்.
நுணா இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் சாப்பிடலாம்.
அரை ஸ்பூன் கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.
அதிமதுரப் பொடி, மிளகுப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
வல்லாரை இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு காலையில் உண்ணலாம்.
அரை ஸ்பூன் செங்கொன்றைப் பட்டைப் பொடியில் நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து, கால் டம்ளர் அருந்தலாம்.
அரை ஸ்பூன் அருகம்புல் பொடியில் ஆலம் பால் ஐந்து சொட்டுகள் கலந்து தொடர்ந்து 40 நாட்கள் தினமும் காலையில் உண்ணலாம்.
வேப்பிலை, ஒமம் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
தராஇலை, ரோஜாப்பூ இதழ் இரண்டையும் சமஅளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
கரிப்பான் இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
வெளிப்பிரயோகம்:
கற்கடாகசிங்கியைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம்.
கார்போக அரிசியையும், புளியங்கொட்டையையும் நீரில் ஊறவைத்து, அரைத்துப் பூசலாம்.
கண்டங் கத்தரிப் பழத்தைக் குழைய வேகவைத்து வடித்து, அதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிப் பூசலாம்.
துளசி இலையை மிளகுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
முள்ளங்கி விதையைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம்.
மருதோன்றி இலைச் சாற்றில் தாளகத்தை இழைத்துப் பூசலாம்.
காட்டு மல்லிகை இலையை அரைத்துப் பூசலாம்.
சிவப்புக் களிமண்ணை இஞ்சிச் சாற்றில் கலந்து பூசலாம்.
மஞ்சளை நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து, அதில் கடுகெண்ணெய் சேர்த்து, நீர் வற்றும் வரை காய்ச்சிப் பின் பூசலாம்.
செங்கொன்றைப் பட்டையை அரைத்துப் பூசலாம்.
சேராங்கொட்டைத் தைலத்தைப் பூசலாம்.
சேர்க்க வேண்டியவை:
பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், சிவப்புக் கீரை, பொன்னாங்கண்ணி, பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கறிவேப்பிலை, இஞ்சி
தவிர்க்க வேண்டியவை:
காபி, தேநீர், சர்க்கரை, வெண்மையான மாவுப் பொருட்கள், தீட்டப்பட்ட தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, புளிப்புப் பொருட்கள் மற்றும் மீன்.
வெண்புள்ளி
சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!
நம் உடலைப் போர்த்தியிருக்கும் சருமத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பான நிறம் மாறி, வெள்ளை நிறம் தோன்றுவதை வெண்புள்ளி என்கிறோம். இது மெலனின் என்ற நிறமிக் குறைபாட்டால் ஏற்படுகிறது. வெவ்வேறு அளவுகள், வடிவங்களில் இருக்கும்.
இந்தப் புள்ளிகள் முதலில் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும் பரவும். நிச்சயமாக, இது தொற்று நோய் அல்ல.
காரணங்கள்:
உணவில் புரதம் மற்றும் வைட்டமின் குறைபாடு
வயிற்றில் உள்ள கிருமிகள்
நாட்பட்ட வயிற்றுக் கோளாறுகள்
ஹார்மோன் பாதிப்பு
மன அழுத்தம்
நோய்வாய்ப்பட்ட நிலை
அமீபியாசிஸ்
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்
கார்போக அரிசியைப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து உண்ணலாம்.
காட்டுச் சீரகப் பொடி, மிளகுத் தூள் சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடலாம்.
நுணா இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் சாப்பிடலாம்.
அரை ஸ்பூன் கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.
அதிமதுரப் பொடி, மிளகுப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
வல்லாரை இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு காலையில் உண்ணலாம்.
அரை ஸ்பூன் செங்கொன்றைப் பட்டைப் பொடியில் நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து, கால் டம்ளர் அருந்தலாம்.
அரை ஸ்பூன் அருகம்புல் பொடியில் ஆலம் பால் ஐந்து சொட்டுகள் கலந்து தொடர்ந்து 40 நாட்கள் தினமும் காலையில் உண்ணலாம்.
வேப்பிலை, ஒமம் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
தராஇலை, ரோஜாப்பூ இதழ் இரண்டையும் சமஅளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
கரிப்பான் இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
வெளிப்பிரயோகம்:
கற்கடாகசிங்கியைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம்.
கார்போக அரிசியையும், புளியங்கொட்டையையும் நீரில் ஊறவைத்து, அரைத்துப் பூசலாம்.
கண்டங் கத்தரிப் பழத்தைக் குழைய வேகவைத்து வடித்து, அதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிப் பூசலாம்.
துளசி இலையை மிளகுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
முள்ளங்கி விதையைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம்.
மருதோன்றி இலைச் சாற்றில் தாளகத்தை இழைத்துப் பூசலாம்.
காட்டு மல்லிகை இலையை அரைத்துப் பூசலாம்.
சிவப்புக் களிமண்ணை இஞ்சிச் சாற்றில் கலந்து பூசலாம்.
மஞ்சளை நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து, அதில் கடுகெண்ணெய் சேர்த்து, நீர் வற்றும் வரை காய்ச்சிப் பின் பூசலாம்.
செங்கொன்றைப் பட்டையை அரைத்துப் பூசலாம்.
சேராங்கொட்டைத் தைலத்தைப் பூசலாம்.
சேர்க்க வேண்டியவை:
பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், சிவப்புக் கீரை, பொன்னாங்கண்ணி, பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கறிவேப்பிலை, இஞ்சி
தவிர்க்க வேண்டியவை:
காபி, தேநீர், சர்க்கரை, வெண்மையான மாவுப் பொருட்கள், தீட்டப்பட்ட தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, புளிப்புப் பொருட்கள் மற்றும் மீன்.
====================================
வெண்புள்ளியை போக்க மூலிகை மருந்து கண்டுபிடிப்பு !! ஒரு விழிப்புணர்வு தகவல்...!!!
என் அருமை நண்பர்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள், சமூக நலனில் அக்கறை கொண்ட, மனித நேயம் மிகுந்த என் நண்பர்கள் இந்த பதிவினை பகிர்ந்து பலருக்கும் இந்த செய்தியை கொண்டு செல்ல உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வெண்குஷ்டம், தொற்றுநோய், தீரா வியாதி, பரம்பரை நோய்... இப்படி ‘வெண்புள்ளி’ பற்றி ஏகப்பட்ட கற்பிதங்கள். சமூகத் தூற்றுதல் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் தன்னம்பிக்கை குலைந்து, அழகு சிதைந்து, வெளியில் முகம் காட்டவே வெட்கப்பட்டு முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை. வெண்புள்ளி பாதித்தோரின் வாழ்க்கை மிகவும் துயரமானது.
உடலில் வெண்புள்ளி எனப்படும் நிறக்குறைபாட்டினை சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெண்குஷ்டம் என அழைத்து வந்தனர்.ஆனால் அதற்கும் குஷ்டம் எனும் நோய்க்கும் சிறிதளவும் தொடர்பில்லை,அரசாங்கம் இந்த குறைபாட்டினை வெண்புள்ளி என அழைக்க ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த குறைபாடு பெரும்பாலும் இளம்பருவத்தினருக்கே வருகிறது.இது தொற்று நோயோ, பரம்பரை நோயோ அல்ல,இது ஒரு நிறக்குறைபாடு மட்டுமே.
இந்த நிறக்குறைபாடு குறித்த போதிய விழிப்புணர்வு இன்மையால் வெண்புள்ளி பாதிப்புள்ளவர்கள் பெரும் துயரங்களை அடைகின்றனர். இவர்கள் படித்து எவ்வளவு நல்ல நிலைக்கு உயர்ந்தாலும் திருமணம் என்று வரும்போது பல இடர்ப்பாடுகளை சந்திக்கின்றனர். இவர்கள் மற்றவர்களைப்போன்றே முழு உடல் ஆரோக்கியம் உடையவர்கள் எனும் தெளிவு நம் மக்களிடையே போதுமானதாக இல்லை என்பதே காரணம்.
முதலில் உடலின் ஏதோவொரு பாகத்தில் சிறியதாக கிளம்பும் வெண்புள்ளி, சில வருடங்களிலேயே உடம்பைச் சூழ்ந்து விடுகிறது. இந்த திடீர் தாக்குதல் ஒட்டு மொத்த இயக்கத்தையும் முடக்கிப் போட்டுவிடுகிறது. சிலர் மட்டுமே இதைக் கடந்து வாழப் பழகு கிறார்கள். வெண்புள்ளிகளைத் தடுக்க வாய்ப்பில்லை. எப்படியாவது குணமாகிவிடாதா என்று ஏங்குபவர்களின் மனநிலையை சாதகமாக்கி பணம் பறிக்கும் கும்பல்களும் பெருகி விட்டன.
உண்மையில், வெண்புள்ளி என்பது ஒரு நோயே அல்ல. இது ஒரு குறைபாடு. ஏதாவது நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது நம் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் போர்க்கோலம் பூண்டு அவற்றைத் தாக்கி அழிக்கின்றன. சிலரின் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள், குருட்டாம்போக்கில் நம் உடலுக்குத் தேவையான மெலனோசைட் என்ற செல்லையும் சேர்த்து அழித்து விடுகின்றன. இந்த மெலனோசைட் செல்கள்தான் நம் உடலுக்கு நிறம் தரும் மெலனின் என்ற நிறமி சுரக்க காரணம். மெலனோசைட் அழிக்கப் பட்டு மெலனின் சுரக்காததால் உடல் வெண்மை நிறத்துக்கு மாறுகிறது. இதுதான் வெண்புள்ளிகளுக்கான பூர்வ சரித்திரம்.
உலக அளவில் 100ல் 2 பேர் வெண்புள்ளியால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் 100ல் 4 பேர். ஜாதி, மதம், இனம், மொழி, வசதி... எந்த வேறுபாடும் இல்லை. தமிழகத்தில் 37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மையைத் தூக்கி எறிய, அவர்களுக்கு எல்லாம் தன்னம்பிக்கை முன்னுதாரணமாக விளங்குகிறார், உமாபதி.
அதனால், இது முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான்'' என்ற உமாபதி, ஆரம்பத்தில் 'வெண்குஷ்டம்’ என்று அழைக்கப்பட்ட இந்த பாதிப்பை, 'வெண்புள்ளிகள்’ என அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் வைத்து, 8 ஆண்டு தொடர்முயற்சிக்கு பிறகு, 2010-ம் ஆண்டு அதிலும் வெற்றியும் பெற்றுள்ளார்
எல்லா வயதினருக்கும் வரக்கூடும் என்றாலும் 13 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களையே வெண்புள்ளி அதிகம் தாக்குகிறது. வெண்புள்ளிகளை குணப்படுத்த ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்து வந்தன. எதுவும் தீர்வு தரவில்லை. முதன்முறையாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ‘லூகோஸ்கின்’ (Lukoskin) என்ற மூலிகை மருந்தை கண்டுபிடித்துள்ளது. ‘‘தொடர்ந்து இதைப் பயன்படுத்தினால் முழுமையான குணம் கிடைக்கிறது’’ என்கிறார் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத் தலைவர் உமாபதி.
‘‘வெண்புள்ளிகளுக்கு தற்போது தரப்படும் எல்லா சிகிச்சைகளுமே கடும் பக்க விளைவுகளை உண்டாக்குபவை. ஸ்டீராய்டு சிகிச்சையில் ஊக்க மருந்தை உடலில் செலுத்தி செயற்கை மெலனினை உருவாக்குவார்கள். ஊசி போட்டவுடன் வெண்புள்ளிகள் மறையத் தொடங்கும். பிறகு வந்துவிடும். கூடவே, சிறுநீரகம் மற்றும் நரம்புப் பிரச்னைகளும் வந்துவிடும். புற ஊதாக் கதிர்கள் மூலம் ஒருசிகிச்சை வழங்கப் படுகிறது. அது எல்லோருக்கும் ஒத்துக் கொள்வதில்லை. இயல்பான தோலின் செல்களை எடுத்து வெண்புள்ளிகள் இருக்கும் இடத்தில் வைத்து வளர்க்கும் ஸ்கின் கிராஃப்டிங் சிகிச்சையும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
ஆனால் லூகோஸ்கின் மாற்றம் தரக்கூடியதாக இருக்கிறது. துளசி, கார்போகி அரிசி, சோற்றுக் கற்றாழை, எருக்கு ஆகிய மூலிகைகள் அடங்கிய மருந்து இது. டானிக்கும், கிரீமும் அடங்கிய இந்த மருந்தை 300 முதல் 400 நாட்கள் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தும் காலத்தில் உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அசைவம், தக்காளி, நெல்லிக்காய் உள்ளிட்ட வைட்டமின் சி அடங்கிய பொருட்கள் சாப்பிடக்கூடாது.
சோப்பு பயன்படுத்தக் கூடாது. 3 மாதங்களுக்கு வரும் காம்போ பேக் 1915 ரூபாய். இந்த மருந்தை வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்திடமே வாங்கிக் கொள்ளலாம். இதை எப்படிப் பயன்படுத்துவது என பயிற்சியும் அளிக்கிறோம்’’ என்கிறார் உமாபதி. மத்திய அரசு நிறுவனம் கண்டறிந்த இந்த மருந்தை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகத் தரலாமே?
இந்த துயரத்தைப் போக்குவதற்காக மத்திய அரசின் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஒரு மூலிகை மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறது.
இது குறித்த மேலும் விபரங்களுக்கு,
வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கம்-இந்தியா,
எண்.6 காமாட்சிராவ் தெரு,பட்டேல் நகர்.
மேற்கு தாம்பரம்,சென்னை-600045.
தொலைபேசி : 044- 22265507, 65381157.
மின் அஞ்சல் : leucodermafree@yahoo.in
website. www.lam-india.org.
குறிப்பு :
இந்த குறைபாடு உடையவர்களுக்கு மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (defence research and development organisation DRDO) மருந்தினை கண்டுபிடித்துள்ளது.இந்த மருந்தினை 300 முதல் 400 நாட்கள் சாப்பிட்டு வர பழைய இயல்பு நிறம் திரும்ப வருவதாக பயன்படுத்திவர்கள் கூறுகிறார்கள்,இது குறித்து விபரங்களையும் மேலே குறிப்பிட்டுள்ள முகவரியிலும் ஃபோனிலும் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
#################################################
வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டுவைத்தியம்.!!!
.
காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவர வேண்டும் நிறைய நீர் குடிக்க வேண்டும். உணவைக் குறைத்து பழங்கள் நிறைய சாப்பிடவேண்டும். பத்தியம் ஏதேனும் உண்டா? வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது.
####################################################
என்னுரை :
''வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதற்கும், தற்கொலைவரை கூட போவதற்கும் காரணம், அதைப் பற்றி இங்கு பரவியுள்ள உண்மைக்குப் புறம்பான வதந்திகள்தான். வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட யாரையும் இந்த சமூகம் ஒதுக்கக்கூடாது என்கிற நிலையை உருவாக்கு வதே எங்கள் நோக்கம். அதற்கான விழிப்பு உணர்வுக்கு தொடர்ந்து செயல்படுவோம்!'
நமக்கு தெரிந்தவர்களுக்கு,அறிந்தவர்களுக்கு, நண்பர்களுக்கு,உறவினர்களுக்கு இந்த குறைபாடு இருக்கலாம்,அவர்களுக்கு இந்த செய்தியை கொண்டு செல்வோமே!!
(LEUCOSKIN ) லியூகோஸ்கின் ஆயின்மெண்ட்,மற்றும் உள்ளுக்குள் சாப்பிடும்சொட்டு மருந்து அனைத்து ஆயுர்வேத மருந்துகடைகளிலும்,ஆன்லைனிலும்கிடைக்கிறது
=================================================
வெண்புள்ளி வெண்படை என்னும் வெண் குஷ்ட நோய் நீங்கி சரியாக...!!!
நீரடி முத்து விதை அரைத்த தூள் .......பத்து கிராம்
கருவேலம் பிசின் ... பத்து கிராம்
கச கசா .... பத்து கிராம்
கருஞ்சீரகம் ................... பத்து கிராம்
காட்டு சீரகம் ................... பத்து கிராம்
கார்போக அரிசி ................... பத்து கிராம்
அனைத்துப் பொருட்களும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்
அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து தூளாக்கிக் கொள்ளவும்
இந்த சூரணத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து
அத்துடன் ஒரு தேக்கரண்டி நாட்டுப் பசுந் தயிர் ( நன்கு புளித்தது மட்டும் ) சேர்த்துக் கலந்து கிடைக்கும் பசையை
காலை சூரிய உதயத்திற்குப் பின்
பாதிக்கப் பட்ட இடங்களில் பூசி
பத்து நிமிடங்கள் சூரிய வெயிலில் நின்று பின் கழுவி வர வெண்புள்ளி நோய் படிப் படியாகக் குணமாகும்
புளித்த தயிர் கிடைக்கவில்லை எனில் எலுமிச்சைச் சாறு பயன்படுத்தலாம்
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்
தகவல் நன்றி:-திரு.பொன்.தங்கராஜ்
==============================================
வெண்படையைப் போக்கும் அருமையான மருந்து
வெண்குட்டம் என்றும், வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா (Luecoderma) எனப்படுகிறது. மெலனின் குறைபாட்டால்தான் இந்த நோய் வருகின்றது. இதை நோய் என்று சொல்வது கூட சரியல்ல. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அளவில் படும் துன்பம் மிக அதிகம். சமூக ரீதியாக இது குறித்த விழிப்புணர்வு அறவே இல்லை.
* கருவேலம்பட்டைப் பொடி- 100 கிராம்
* கீழாநெல்லிப் பொடி- 100 கிராம்
இவை இரண்டையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து அரை லிட்டராக சுண்டும் அளவுக்கு நன்கு கொதிக்க வைக்கவும்.
பிறகு அதை வடிகட்டி, இத்துடன்
* வெந்தயப் பொடி- 80 கிராம்
கலந்து, வெய்யிலில் வைக்கவும். நீரெல்லாம் சுண்டிப் போகும் வரை வெய்யிலில் வைக்கவும். இறுதியில் வண்டல் போல மிஞ்சும் சூரணத்தை நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
இந்தச் சூரணத்தை 500 மி.கி. அளவு எடுத்து, காலை உணவுக்கு முன், தண்ணீரில் கலந்து சாப்பிட வெண்படை குணமாகும்.
மருந்துண்ணும் போது அகத்திக்கீரை, பாகற்காய், சிறுகீரை ஆகியவற்றையும், கருவாட்டையும் சேர்க்கலாகாது.
முக்கியமான விஷயம் என்னவென்றால் உணவில் புளிப்பு தவிர்க்கப்படவேண்டும்.
===============================
வெண்படை (Leucoderma)
வெண்குட்டம் என்றும், வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா எனப்படுகிறது.
மெலனின் குறைபாட்டால்தான் இந்த நோய் வருகின்றது. இதை நோய் என்று சொல்வது கூட சரியல்ல. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அளவில் படும் துன்பம் மிக அதிகம். சமூகரீதியாக இது குறித்த விழிப்புணர்வு அறவே இல்லை.
வெண்படைக்கு எளிய மருந்து
********************************
* கருவேலம்பட்டைப் பொடி- 100 கிராம்
* கீழாநெல்லிப் பொடி- 100 கிராம்
இவை இரண்டையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து அரை லிட்டராக சுண்டும் அளவுக்கு நன்கு கொதிக்க வைக்கவும்.
பிறகு அதை வடிகட்டி, இத்துடன்
* வெந்தயப் பொடி- 80 கிராம்
கலந்து, வெய்யிலில் வைக்கவும். நீரெல்லாம் சுண்டிப் போகும் வரை வெய்யிலில் வைக்கவும். இறுதியில் வண்டல் போல மிஞ்சும் சூரணத்தை நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
இந்தச் சூரணத்தை 500 மி.கி. அளவு எடுத்து, காலை உணவுக்கு முன், தண்ணீரில் கலந்து சாப்பிட வெண்படை குணமாகும்.
மருந்துண்ணும் போது அகத்திக்கீரை, பாகற்காய், சிறுகீரை ஆகியவற்றையும், கருவாட்டையும் சேர்க்கலாகாது.
முக்கியமான விஷயம் என்னவென்றால் உணவில் புளிப்பு தவிர்க்கப்படவேண்டும்.
மேல்பூச்சுக்கான மருந்து
**************************
1.அவுரிச்செடி
2.குன்றிமணி
குன்றிமணி விதைகளை 50 கிராம் அளவு எடுத்து, ஊறவைத்து அதன் மேல் தோலை உரித்து எடுத்துவிடவேண்டும். நமக்கு தேவையானது அதன் பருப்புகள் மட்டுமே. அந்த பருப்புகளை 200 மி.லி அவுரி இலைச்சாறு விட்டு அரைக்க வேண்டும். அந்த விழுதை, குச்சி அல்லது பென்சில் போல நீளமாக உருட்டி காய வைக்க வேண்டும். கல்லில், சிறிது நீர் விட்டுஅதில் அந்த காய்ந்த மருந்து குச்சியை அரைத்தெடுத்து, வெண்படை உள்ள பகுதிகளில் பூசி வந்தால் குணம் பெறலாம்.
அவுரிச் செடி கிடைக்கவில்லையெனில் நாட்டுமருந்துக் கடையில் அவுரி இலைப்பொடி கிடைக்கும். அதை 100 கிராம் வாங்கி ஒரு லிட்டர் நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து, 200 மி.லி.யாக சுண்டவைக்கவும். பின் அந்த சுண்டிய நீரில் குன்றிமணி பருப்புகளை அரைத்து, அந்த விழுதை குச்சி போல உருட்டி காய வைக்கவும். பின் அதை கொஞ்சம் நீர் விட்டு இழைத்து வெண்படை உள்ள இடங்களில் பூசவும்.
வாய் உள்ளே வெண்படை இருக்குமானால், உதாரணமாக கீழ் உதட்டின் உள்புறத்தில் வெண்படை இருக்குமானால், இந்த பூச்சை உள்ளே போடக்கூடாது. மாறாக கீழ் உதட்டின் வெளிப்புறத்தில் பூசிவிட்டால் போதுமானது. இந்த பூச்சு வாயில் படுவதை தவிர்க்கவும்.
2. வெண்படை தீர இன்னுமொரு மருந்து
******************************************
தேவையானவை:
1. கார்போக அரிசி-200கிராம்
2. இஞ்சிச்சாறு-50கிராம்
3. மஞ்சள் கரிசாலைச் சாறு-50கிராம்
இஞ்சிச்சாறு, கரிசாலைச்சாறு ஆகிய இவ்விரண்டு சாறுகளை ஒன்றாகக் கலந்து, அதில் கார்போக அரிசியை ஊறவைக்கவும். கார்போக அரிசியின் மேல்தோல் கழலும் அளவுக்கு ஊறவைக்கவும்.
அந்த அளவுக்கு ஊறிய பின் நன்றாக பிசறினால், மேல்தோல் தனியாக வந்துவிடும். மேல்தோல் நீக்கப்பட்ட கார்போக அரிசியை மட்டும் தனியே எடுத்து, அதில் இஞ்சிச்சாறு, மஞ்சள் கரிசாலைச் சாறு விட்டு மைபோல அரைத்து, மிளகளவு இருக்கும்படியாக, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
காலை, மாலை என இரு வேளையும், வேளைக்கு ஒரு மாத்திரையாக,
உணவுக்கு முன் உண்டுவர வெண்புள்ளிப் படலம் பூரணமாக குணமாகும்.
மருந்து உண்ணும் போது பத்தியமாக காபி, அகத்திக்கீரை, சிறுகீரை, சுண்டக்காய், பாவற்காய் மற்றும் அசைவ உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
-சி.எம்.ரங்கராஜ்
http://namnalam.blogspot.in/?view=classic
==================================

Baskar Jayaraman's photo.
Baskar Jayaraman's photo.
Baskar Jayaraman's photo.
வெண் குஷ்டம் என்ற வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான நிருபிக்கப் பட்ட வீட்டு வைத்தியம் .!!!
உள் மருந்தாக
காலையில் வெறும் வயிற்றில்
ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொழுந்து,
சம அளவு கீழாநெல்லி கொழுந்துடன்
சேர்த்து
மெதுவாக மென்று விழுங்க வேண்டும்
.நீர் அதிகமாக அருந்த வேண்டும்
,
உணவை குறைத்து பழங்கள் அதிக அளவு எடுக்கவும்
வெளி மருந்து (மேற் பூச்சு மருந்து )
௧) வேப்பம் கொழுந்து
௨)கஸ்துரி மஞ்சள்
.௩) நாட்டுப் பசு மோர் (வீட்டில் தயாரித்தது)
வேப்பம் கொழுந்து மற்றும் கஸ்துரி மஞ்சள் சம அளவு எடுத்து கொண்டு
தேவையான அளவு வீட்டில் தயார் செய்த நாட்டுப் பசு மோர் மோர் விட்டு
அம்மி கல்லில் நன்றாக மை போல அரைத்து
காலை பொழுது (6 முதல் 8 க்குள்)
பாதிப்பு உள்ள இடங்களிலும்
,விருப்பம் இருந்தால்
மற்ற இடங்களிலும் தடவி
இளம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும்,
இது போல 90 நாட்கள் செய்தால்
வெண்புள்ளிகள் மறைந்து
இயல்பு நிலைக்கு உடலின் நிறம் வந்துவிடும்,
பாதிப்புகள் அதிகமாக இருந்தால்
சற்று கால தாமதம் ஏற்படும்
ஆனால் நிச்சயமாக குணமாகிவிடும்.
.உள் பிரயோகம் மற்றும் வெளிபிரயோகம் இரண்டையும் சேர்த்தும் செய்யலாம்
தக்காளி,புளி, வெங்காயம், வாழைப்பழம்,ஆப்பிள் பிரெட்,கார்ன் புட்ஸ்
,வைட்டமின் “C” உள்ள பொருள்கள்,கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு,
அசைவம்,வெள்ளை சர்க்கரை ,ஊறுகாய்,மைதா
மற்றும் மைதாவில் செய்த உணவு பொருள்களை சேர்க்க கூடாது.
வெள்ளை சர்க்கரை கண்டிப்பாக பயன் படுத்தக் கூடாது
எந்தவித side-effect வும் ஏற்ப்படுத்தாது.
.தகவல் நன்றி :-நண்பர்.திரு.பொன்.தங்கராஜ்
===========================
#வெண்குட்டத்திற்கு எளிய மருந்து #$
கருந்துளசி, (சாதாரண துளசி இதற்குப் பயன்படாது)
,சங்கிலை
மருதாணியிலை
,நிலவேம்பு,
வில்வ இலை,
வல்லாரை இலை
இவைகளை எல்லாம் பசுமையாகப் பறித்து வந்து
நிழலில்
தரைபடாமல்உலர்த்தவும்
. இவைகளை இடித்து சலித்து சூரணமாக்கி
காலை ,மாலை,இரவு,
ஒரு ஸ்பூன் நீருடன் உட்கொள்ளவும்.
சில மாதங்களில் இந்நோய் பலருக்கு தீர்ந்திருக்கிறது
சோரியாஸிஸ் நோயிலிருந்து நிரந்தர விடுதலை அளிக்கும்சேங்கொட்டை லேகியம்#$
1.சேங்கொட்டை 70கி
2.எட்டிக்கொட்டை 35கி
3.தேற்றான் கொட்டை 35 கி
4.சித்திர மூலவேர்ப்பட்டை 35கி
5.பரங்கிப்பட்டை 35கி
6.கருஞ்சீரகம் 35 கி
7.சுக்கு 70கி
8.நெய் 250கி
9.நாட்டுச்சர்க்கரை 500கி
இவையெல்லாம் முறைப்படி சுத்தி செய்து லேகியமாக்கி உண்ணசொரியாசிஸ் நோய் நிரந்தரமாக நீங்கும்.
சொரியாசிஸ் மட்டுமில்லாமல் வெள்ளைவெட்டை,சூலை,சிரங்கு,சொறி,கை கருப்பு, கால் கருப்பு,முகக்கருப்பு ஆகியநோய்கள் நீங்கும் .
படை, வண்டுக்கடி, தோல், நோய்கள் நீங்கும்.
வெள்ளருகு சூரணம்
வெள்ளருகு 20 கிராம்
சங்கன் வேர்ப்பட்டை 20 கிராம்
சிவனார் வேம்பு 40 கிராம்
பறங்கிச்சக்கை 80 கிராம்
பறங்கிச்சக்கையை சிறு துண்டுகளாக்கி ஒரு பானையில் இட்டு பசும்பால் 1 லிட்டருடன் தண்ணீர் 1 லிட்டர் கலந்து எடுத்து 3ல்4 பாகம் சுண்டியபின் தண்ணீர் விட்டுக்கழுவி பறங்கிச் சக்கையை நன்கு வெயிலில் உலர்த்தவும். புpற சரக்குகளைத் தனிக்தனியே வெயிலில் உலர்த்தி, தனித்தனியே இடித்துச் சலித்து ஒன்று கலந்து வைத்துக் கொள்ளவும். குடைசியாக 160 கிராம் சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ளவும்.
அளவு, அனுபானம்:
காலை- இரவு உணவுக்குப் பின் 1 முதல் 2 கிராம், தண்ணீரில் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
படை, வண்டுக்கடி, தோல், நோய்கள் நீங்கும்.
தோல் நோய்களுக்கு நிரந்தர தீர்வாகும் சேவகனார் தைலம்
தோல் நோய்களுக்கு நிரந்தர தீர்வாகும் சேவகனார் தைலம்
வெண்புள்ளி நோய் அறிதல்:
உடம்பில் கை, கால், முகம், மறைமுக உறுப்புகளில் ஆரம்ப காலத்தில் வெண்புள்ளிகளாகத் தோன்றி பின்பு உடல் முழுவதும் நிறம் மாறி, மயிர் வெண்மை நிறத்தை அடையும். இந்த வகை நோயாளிக்கு குறைந்த கால அளவு மருந்து உட்கொண்டால் போதும். முதலில், ஆசன வாய், உள்ளங்கால், உதடு, விரல்களில் நுனி இவைகளில் தோன்றினால் அவர்கள் அதிக நாட்கள் மருந்து உட்கொள்ள வேண்டும்.
செதில் உதிரும் நோய்:
செதில் உதிரும் நோய்:
இது தோலின் மேல் சிவப்பு நிறத்தில் வட்டமாகத் தோன்றும். அதன்மேல் சிரங்கு போன்ற கொப்புளங்கள் தோன்றி பின் தலை, கை, கால், வயிறு பக்கங்களில் வெண்மை நிறத்துடன், செதில் செதிலாகத் தோன்றி, விரிவடையும். யூகி தனது நூலில் இதன் தன்மையை விரிவாக எழுதியுள்ளார். விற்போடகக் குஷ;டம் என்ற தலைப்பில் 468வது பாடலில்(குஷ;டரோக நிதானம் என்ற தலைப்பில்) 'புதுமையாய் சரீர மெங்கும் தினவு உண்டாகும். குனத்த விற்போடக குஷ;டந்தானே' என்று கூறியுள்ளார். அவரின் 517வது பாடலில் இந்த நோய் சாத்தியம் என்கிறார். இந்த நோய் உடல் முழுமைக்கும் பரவி துன்பத்தை கொடுத்தாலும் சேவகனார் தைலம் அவர்களை நோயிலிருந்து விடுபடச் செய்கிறது.
சேவகனார் தைலம் செய்முறை
சேவகனார் தைலம் செய்முறை:
பிரிவு:1
• கார்த்திகைக் கிழங்கு 100 கிராம்
• காட்டுள்ளிக் கிழங்கு 100 கிராம்
• முதியார் கூந்தல் 100 கிராம்
• பிரப்பன் கிழங்கு 100 கிராம்
• பறங்கிப்பட்டை 100 கிராம்
• வெள்ளாட்டு சாணி 100 கிராம்
பிரிவு:2
• புங்கை எண்ணை 200 மி.லி
• வேப்ப எண்ணை 200 மி.லி
• இலுப்பை எண்ணை 200 மி.லி
• ஆடணக்கு எண்ணை 200 மி.லி
• நல்லெண்ணை 200 மி.லி
பிரிவு:3
• வெள்ளைப்பூண்டு சாறு 1லிட்டர்
• பெருங்காயம் 50 கிராம்
• சுக்கு 50 கிராம்
• மிளகு 50 கிராம்
• திப்பிலி 50 கிராம்
• கற்கண்டு 50 கிராம்
செய்முறை:
பிரிவு 1ல் குறிப்பிட்ட மூலங்களை நன்றாக இடித்து பட்டையை நன்றாக சிதைத்து, நூறு லிட்டர் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு, ஒரு மரத்து விறகால் எரித்து ஒரு லிட்டர் வரும் வரை நன்றாக எரிக்கவும். அந்த கசாயத்தை நன்றாக வடிகட்டிக் கொண்டு, ஒரு பெரிய வாணலில் ஊற்றி, அதில் பிரிவு 3ல் உள்ள வெள்ளைப்பூண்டு சாறுடன் மற்ற பொருட்களைக் கூட்டி (சரக்குகள் அனைத்தையும் இடித்து சலித்த பின்), 2ம் பிரிவில் உள்ள எண்ணெய்ப் பொருட்கள் கலவையில் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி, நீர் சுண்டி வரும் பக்குவத்தில் கற்கண்டைப் பொடி செய்து போட்டு, மெழுகு பதம் வந்தவுடன் இறக்கிக் கொள்ளவும்.
மருந்தின் அளவு:
பெரியவர்களுக்கு 1 டீஸ்பூன்(5 கிராம்)
சிறியவர்களுக்கு 1ல்2 பாகம் டீஸ்பூன்(3 கிராம்)
மருந்துண்ணும் நெறி:
மருந்து உண்ணும் போது இறைச்சி, உலர்ந்த மீன், மொச்சை, கொள்ளு, புளி, புளிப்புச் சுவையுள்ள பழங்கள், பூசணி, கடுகு, எண்ணை, புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் தவிர்க்க வேண்டும். உடலுறவு கூடாது.
குணப்படுத்த முடிவதும் முடியாததும்:
சேதில் உதிரும் நோய் உடல் முழுவதும் வியாபித்து கனத்து கரடு கட்டி இருப்பினும் குணமடையும். வெண்படை நோய் உடல் முழுமையும் பரவி, வெண்மையாகி, முழங்கால், கைகளில் கரடு ஏற்பட்டு புண்களாகி நீர்வடியும் பட்சத்தில் தீர்க்க முடியாது.
தகவல் நன்றி :- திரு.பொன்.தங்கராஜ்

Wednesday, June 15, 2016

அனுமனை உபாசனை செய்து சித்தர்கள்

அனுமனை உபாசனை செய்து சித்தர்கள்
அனுமாரின் பெருமையை முழுமையாக
உணர்ந்தவர்கள், அவரையன்றி வேறொருவரை
வணங்கிட மாட்டார்கள். அத்தனை
சிறப்புகளைக் கொண்ட அனுமனைப் பற்றி
சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில்
உயர்வாய் குறிப்பிட்டிருக்கின்றனர்.
அனுமனை
உபாசனை செய்து சித்தர்கள் விண்ணில்
பறந்தார்கள். சிரஞ்சிவித்வம் (மரணமில்லா
வாழ்வு) பெற்ற அனுமாரின் மந்திரத்தையும்
செபம் செய்பவர்களுக்கு அனேகவிதமான
சித்துக்கள் கிட்டும் என்றும் குறிப்பிட்டிருக
்கின்றனர்.
அகத்தியர், யூகிமுனி, கொங்கணர், கோரக்கர்
போன்ற சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களின்
ஊடே அனுமனைப் பற்றிய பல தகவல்களை
மறைத்துக் கூறியுள்ளனர்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த அனுமனின் மூல
மந்திரத்தினை, இந்த புத்தாண்டு நாளில்
பகிர்வது மிகவும் பொருத்தமாயிருக்கும் என
கருதுகிறேன். இந்த மூல மந்திரம் கோரக்கர்
அருளிய “நமனாசத் திறவுகோல்” எனும்
நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
அனுமந்தர் வசிய மந்திரம்
-------------------------
ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா
ஆங்கார அனுமந்தா
ஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா
அரிராம தூதா
அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக
வருக
வசி வசி சுவாகா.
இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து
துளசி மாலை
அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48
நாட்களில் லட்சம்
உரு செபிக்க சித்தியாகும்.
செபிக்கும் முறை
மிகவும் சுத்தமாய் தூய்மையான இடத்தில்
அமர்ந்து செய்யவும்.
மந்திரம் செபிக்கும் 48 நாட்களும் தனி
அறையில் படுக்கவேண்டும்
தீட்டு பட்டவர் பார்க்காதவாறு நம்மீது
அவர்கள் ஒட்டாமலும்
செபிக்கவேண்டும்.பெண்கள்
சகவாசம்,மது,மாமிசம்,புகையிலை
போன்ற பழக்கம் இல்லாமல் இருக்கவேண்டும்.
மந்திரம் செபிக்க தொடங்கியதும் இடையில்
நிறுத்தக்கூடாது நிறுத்தினால் பல
துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை
கவனத்தில் கொள்ளவும்.
இம்மந்திரத்தின் பலன்
இம்மந்திரத்தை முறையாக செபித்தவருக்கு
எதிரிகாளால் எந்த துன்பமும் ஏற்படாது.சகல
காரியமும் சித்தியாகும்.
அனுமந்த உபாசகரை கண்டாலே பேய் பிசாசு
பில்லி சூனியம்
சகலமும் மிரண்டு ஓடிவிடும் அனுமந்த
உபாசகரை எதிர்த்தவன்
பல துன்பங்களுக்கு ஆளாகி தொலைந்து
போவான்.
அண்டிடுவாய் அனுமாரின் மூலமந்திரம
---------------------------------------

ஆதார அனவரத ஓம். ரா. ஜ. மூர்த்த
விண்டுணு வாய்வு புத்திரா. ஹா. ரீம்.
அனுமந்தாய
வீக்ஷண்ய பக்ஷ ராஜசிரஞ்சீவி வாமஸ்யா
கண்டு ஸ்ரீம். உமாபதிங். உங். ருங். லுங் சுங்
ஆம். அம். உம். லா. லீ லூ. லே. லம். ஸம்
பண்டு மம. ஜீவ. ரெக்ஷ தரத் மான்மியம்
தேவ். மாவ் பாத தெரிசய அனுமந்த சரணாய
நமஸ்து.
அனுமார் மூல மந்திரம்..
-----------------------
ஓம் ராஜ மூர்த்த வாயுபுத்ரா. ஹா. ரீம்
அனுமந்தாயா. வீக்ஷண்ய பக்ஷராஜா
சிரஞ்சீவி வாமஸ்யா ஸ்ரீம் உமாபதிஸ்
உங். ருங். லுங். சுங். ஆம். அம். உம்.
லா. லீ. லூ. லே. லம். ஸம். மம. ஜீவ
ரெக்ஷதரத் மான்மியம்
தேவ். மாவ் பாததெரிசய. அனுமந்த சரணாய
நமஸ்து
இந்த மூல மந்திரத்தை தினமும் செபித்து வர
நலமும், வளமும் நிறையும்.
பில்லி, சூனியம், ஏவல் நம்மை தாக்காமல்
இருக்க அகத்தியர் கூறும் மந்திரம்:
:
:
: “பாரப்பா அனுமந்தன் வசியக் கட்டு
பகன்றிடுவேன் பதறாது உற்று நோக்கு
யாரப்பா அறிவார் இவரின் கூத்து
ஆணவத்தை வென்றவர்கள் அறிவாரப்பா
கூறப்பா ஓம் ஹரி ஆதி யென்று
குற்றமில்லா நாராயணா மேலும்
சேரப்பா அகிலாண்ட நாயகா வென்று
சொல்லிடுவாய் நமோ நமோ வென்றே
என்றுமே அனுதினமும் ஓதுமனுமந்தா
லெங்காபுரி ராவண சம்மாரா
சென்றுமே சஞ்சீவி ராயா மேலும்
சீக்கிரமே ஓடிவா உக்கிரமாவே ஓடிவா
வென்று நீ படித்து படித்து வரும்
விதமான பில்லி சூனியம் பேய் பிசாசும்
கொன்றுமே பிரம ராஷசிகளைப் பிடி பிடி
குலுங்க அடி அடி கட்டுக் கட்டே
கட்டிப் பின் வெட்டு வெட்டுக்
கதற கொட்டு கொட்டு நீ
முட்டி நீ தாக்கு தாக்கு ஓம்
மேலும் ஆம் மிளைய வனுமந்தா
கட்டி வா வா சுவா ஹா கூறு நீயும்
கட்டிய மந்திரந் தன்னை மைந்தா
மட்டில்லா பஞ்ச முறை சொல்லி பின்னே
மயங்காமல் நீறேடுத்து தூவு தூவே
தூவினால் திக்கெல்லாம் கட்டலாச்சு
துப்பரவாய் செய்வினையும் நீங்கலாச்சு
குறிப்புடனே யேதிராவார் எது தாழ்வே
பாவி தானாக்கால் யேது மேன்மை"
-;அகத்தியர்
சிவ சிவ சிவ சிவ நமசிவாய......

ஐயா சதுரகிரி புக் செல்லர்(புத்தக விற்பனையாளர்) திரு.மனோகர்

ஐயா சதுரகிரி புக் செல்லர்(புத்தக விற்பனையாளர்) திரு.மனோகர்அவர்கள் மிக அரிதான சித்தர் நூல்களையும்,மிகப்பழமையான சித்தமருத்துவ நூல்களை மட்டும் விற்பதை ஆன்மீக சேவையாக செய்து வருகிறார்.ஐயாவை ஒருமுறை சந்திக்கவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை,இறைவன் அருள் புரிய வேண்டும்.
Sathuragiri Book Seller Manohar
வரிசை எண்: L01-001 "தமிழ்ச் சித்தர் மரபு"
ஓம் சிவாயநம....
சிவனடியார்கள், சித்தர்கள் வழி நடப்பவர்கள், சித்தராக ஆகிட முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள், நமது முன்னோர்களான பதினெட்டுச் சித்தர்களைப் பற்றி அறிவியல் பூர்வமாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் படித்தே ஆக வேண்டிய....
இந்த "தமிழ்ச் சித்தர் மரபு" புத்தகத்தின் விலை, வெறும் இருநூறு ( 200/- ) ரூபாய் மட்டுமே....
கொரியர் செலவுடன் சேர்த்து வெறும் இருநூற்றைம்பது ( 250/- ) ரூபாய் மட்டுமே....
வேண்டுவோர் உடன் தொடர்பு கொள்ளவும்....
மனோகர்....94434-12387
வரிசை எண்: L01-002 "சித்தர்களின் மூலிகை விரிவகராதி"
சித்த மருத்துவத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய இந்த, "சித்தர்களின் மூலிகை விரிவகராதி" விலை, வெறும் நூற்றைம்பது ( 150/- ) ரூபாய் மட்டுமே.... கொரியர் செலவுடன் சேர்த்து வெறும் இருநூறு ( 200/- ) ரூபாய் மட்டுமே....
மேற்கண்ட இரண்டு புத்தகங்களும் கொரியர் செலவுடன் சேர்த்து வெறும் நானூறு ( 400/- ) ரூபாய் மட்டுமே....
வேண்டுவோர் உடன் தொடர்பு கொள்ளவும்....
மனோகர்....94434-12387....
facebookல் இருப்பவர்கள், "RARE BOOKS" எனும் பக்கத்தைப் பார்க்கவும்....
இன்றைய புது வரவுப் புத்தகங்கள்....
1. பதார்த்த குண சிந்தாமணி....ரூ.150/-
2. அகஸ்தியர் 12000. ஒருசெட்....ரூ. 375/-
3. அகஸ்தியர் வாத சௌமியம் 1200....ரூ.125/-
4. அகஸ்தியர் இழக்க சௌமிய சாகரம்..(1....ரூ. 2௦௦/-.
5. அகஸ்தியர் இழக்க சௌமிய சாகரம்..(2)....ரூ. 6௦/-
6. போகர் 7000. ஒரு செட்....ரூ. 525/-
7. ஒட்டியம் சல்லியம்....ரூ. 35/-
8. கோரக்கர் சந்திர ரேகை....ரூ. 75/-
9. கோரக்கர் மலை வாகடம....ரூ. 6௦/-
10. உயிர் காக்கும் சித்த மருத்துவம்....ரூ. 300/-
11. விஷ வைத்திய ஆருட நூல்கள்....ரூ. 150/-
12. நந்தீசர் அகால மரண நூல்....ரூ. 50/-
13. யுனானி தாது விருத்தி போதினி....ரூ. 350/-
14. சித்தர்கள் ரசவாதக் கலை....ரூ.150/-
15. இரசவாத சிந்தாமணி....ரூ.175/-
16. இரசவாத மஞ்சரி....ரூ. 45/-
17. அனுபவ நாடி ஞான போதினி....ரூ. 30/-
18. முப்பு எனும் கற்ப மருந்து....ரூ.
19. ஞான சர நூல்....ரூ. 50/-
20. சித்த மருத்துவம் கேள்வி-பதில் களஞ்சியம்....ரூ. 250/-
21.தெய்வீக ரசமணி....ரூ. 30/-
22.சித்தமருத்துவ மூலிகை விரிவகராதி....ரூ. 150/-
வேண்டுவோர் உடன் தொடர்பு கொள்ளவும்....
மனோகர்.... 94434-12387

Tuesday, June 14, 2016

பெண்மாயை தீர ,ஆன்மீகத்தில் உயர்வு உண்டாக அகஸ்தியர் கூறும் ரகசியம் !!!

மூலாதாரத்தில் மனம் வைத்து
"ஓம் அங் உங் அவ்வும் உவ்வும் ஸ்ரீம் சிவாய கங் கணபதயே நமா "
என்று 1008 உரு 48 நாட்கள் ஜெபித்து வர மூலாதாரத்தில் ஒளி உண்டாகும். அதன் பலனாக பெண்மாய்கையான காமம் எந்நாளும் தோன்றாது ,யோக உயர்வுக்கும் வழிவகுக்கும் என்று அகஸ்தியர் பூஜாவிதி 200 என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேன்சர் (Cancer) நோய்க்கு எளிய மருந்து ரெடி !

கேன்சர் (Cancer) நோய்க்கு எளிய மருந்து ரெடி !
மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில் மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் , தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன் பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விடயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம் அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.
எல்லாம் வல்ல நம் விநாயகப் பெருமானுக்கும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கு முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய் ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு வகையான பூஞ்சை காளான் நோயாகும்.
சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார். ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது. அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை. இதன் பின் தான் இதற்கான மருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது, அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார். இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பின் அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.
வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்
விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்
பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும்
பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்
நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி
நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து உப்பாக்கினால்
உனக்கு நிகர் வைத்தியன் பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்
பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !
– அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17
கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான் என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார். இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை என்ற செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது. நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம். அதன் பின் இந்த உப்பை நன்றாக பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று கேட்டார், நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம். அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார், இல்லை என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை எடுத்துக்கொடுத்தோம். இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate (NaHCO3) ) தான் என்றார். நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம் உடனடியாக அவர் கூறினார் இதுதான் ”சமையல் சோடா “ அல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறியதோடு இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்பிசத்த்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்தவும் இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள் என்றார் அவர்.
அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது. 2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில் வெளியீட்டுள்ளார். இதன் முகவரிhttp://www.curenaturalicancro.com/en/
பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில் வெளியீட்டுள்ளார். இதுவரை கேன்சர் தொடர்பான ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.
ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கொள்ளை கூட்டம் இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை சென்றடைந்துள்ளது.
மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர் நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் – ஐ செலுத்தி குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.
வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து என்று தெரிவிக்கிறார். அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில் நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில் இருந்து காலை 1 ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும். முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை கருதி சில நேரங்களில் அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1
நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும் கொடுக்கலாம் என்கிறார்.
இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.
நாகதாளி என்ற மூலிகையை நமக்கு எடுத்து கொடுப்பதற்காக இரண்டுஆண்டுகளாக காட்டில் ஒருபகுதி கூட விடாமல் சளைக்காமல் தேடி எடுத்து கொடுத்த அன்பர்கள் , இதற்கு வாகன உதவி செய்த நண்பர்கள், உணவு , இருப்பிடம் என அனைத்தும் செய்து கொடுத்த மலைவாழ் மக்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம். எத்தனை நாட்கள் எங்களுக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள், பசியோடு இரவு பகல் பாராமல் எத்தனை நாட்கள் காடுகளில் அலைந்திருப்பீர்கள், தானும் தம் குடும்பமும் மட்டுமே வாழவேண்டும் என்ற சுயநலமுள்ள மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையில் நீங்கள் எங்களை நம்பி இந்த உதவி செய்தீர்கள் என்று தெரியவில்லை. இந்த வெற்றி உங்களால் தான் சாத்தியம் ஆகி இருக்கிறது. கண்ணீருடன் மறுபடியும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறோம். வலைப்பூ வாயிலாக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
நம் குருநாதரின் ஆசியோடு இந்த மருத்துவ முறையை ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உள்ளபடியே நம் தமிழ் உறவுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். இதைப்படிக்கும் ஒவ்வொரு நபரும் மறக்காமல் இந்தப்பதிவை எல்லா தமிழ்மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் எண்ணம். சித்தர்களின் பல அரிய மருத்துவ விடயங்களை இயற்கை உணவு உலகம் பாகம் 2 புத்தகத்தில் வெளியீடலாம் என்று இருந்தோம் ஆனால் இயற்கை உணவு உலகம் பாகம் 1 புத்தகம் எதிர்பார்த்த அளவு மக்களிடையே சென்றடையாத காரணத்தினால் இயற்கை உணவு உலகம் பாகம் 2 வெளியீடுவதை தவிர்த்துள்ளோம். காலமும் குருநாதரின் ஆசியும் இருந்தால் வெளிவரலாம். இயற்கை உணவு உலகம் பாகம் 1 பற்றிய விபரங்கள் அறிந்து கொள்ள இங்கு சொடுக்கவும்.
பப்ளிகேசன் இணையதள முகவரி : http://www.kandasamypublication.com/
Ref:https://www.facebook.com/drbaskarchannapatna/posts/1269271246423874
Dr Tullio Simoncini Cancer Therapy. Dr. Simoncini is an oncologist who treats cancer as fungus and has cured many cancer patients
CURENATURALICANCRO.COM

Saturday, March 26, 2016

மஞ்சள் காமாலை

நம்பிக்கையோடு பகிர்கிறேன். சொந்த அனுபவமுள்ள யாராவது கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
Arasai Vadivel
ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்.
******* ****** ***** *****
நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது.
ங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ
இது அவசியம் பயன் படும்.
சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.
ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.
அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன்.
ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது.
ஆனால் பையன் உணவு சாப்பிடவில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தான்.தண்ணீர் குடித்தாலும் வாந்தி எடுத்தான்.
சந்தேகப்பட்டு கண்ணைப் பார்த்ததில் மஞ்சள் நிறம் தெரிந்தது.
எனவே இரத்தம்.,சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தேன்.
அவர் பரிசோதனை செய்துப் பார்த்து விட்டு,மஞ்சள் காமாலை அதிகமாக உள்ளது.ஆஸ்பிட்டலில் தங்கவேண்டும்.தொடர்சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.ஆறுமாதமாவது மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.என பயமுறுத்திவிட்டார்.
மருத்துவம் குறித்த புரிதல் உள்ளவனாதலால்,சரி நாளை வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன்.
கிராமப்புரங்களில் மூலிகை மருந்துக் கொடுத்து அதை எளிதில் குணப்படுத்திவிடுவார்கள்.
மேலும்,மஞ்சள் கரிசலாங்கண்ணி ,கீழாநெல்லி இரண்டும் சிறந்த மருந்து என்பதும் தெரியும்.இரண்டு மூலிகையும் எங்கள் கிராமப்புறங்களில் எளிதில் கிடைப்பதுதான்.
இரண்டுநாளாக தண்ணீர் கூட வயிற்றில் நிற்காததால் பையன் மிகவும் சோர்ந்துவிட்டான்.
அப்போது ஒரு நண்பர்,விழுப்புரம் அருகே கெங்கராயம் பாளையம் என்ற ஊரில்,இதற்கு ஒரேவேளை மருந்தில் குணமாக்குகிறார்கள் எனச் சொன்னார்.
பின்னும் இரண்டு நபர்கள் அதை உறுதிப் படுத்தினர்.
அன்றே பையனை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்குச் சென்றேன்.
மனசுக்கு மிகவும் கவலையாக இருந்தது.எதுவும் சாப்பிட முடியாதநிலையில் பையன்.
அங்குச் சென்றவுடன்,அந்த மருத்தவர் வீட்டை அடைந்தால் நூறு பேருக்கு மேல் அமர்ந்துள்ளார்கள்.தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.ஒரு சிலர் பெங்களூரிலிருந்தும் வந்திருந்தனர்.அந்தளவு அந்த மருத்துவரின் பேர் பரவியுள்ளது.
மஞ்சள் காமாலை க்கு மட்டும் மருத்துவம் பார்க்கிறார்.
நோய் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.எல்லோர் முகத்திலும் நம்பிக்கை.
எல்லோரையும் வரிசையாக அமரவைத்துவிட்டு,சாதம் பொங்கி அதில் வெல்லம் கலந்து.,ஒரு சிட்டிகை மருந்தும் கலந்து கையில் ஒரு உருண்டை தந்து விழுங்கச் சொல்கிறார்கள்.அது இனிப்பாக இருப்பதால் எல்லோரும் விருப்பமுடன் உண்டு விடுகின்றனர்.
நாளையிலிந்து நோய் இறங்க ஆரம்பித்துவிடும்.ஐந்து நாளில் நார்மலாகிவிடுவார்.அதுவரை கீரைவகைகளை மட்டும் தினம் உணவில் சேர்க்கவும்,எனவும்
இதிலேயே சரியாகிவிடும் மீண்டும் வரவேண்டாம் எனச் சொல்லி அனுப்பி
விடுகின்றனர்.பெரியவர்களுக்கு மட்டும் சாராயம் அருந்தக்கூடாது என்றக் கண்டிப்பு.வேறு பத்தியமில்லை
வழக்கமான உணவு உண்ணலாம்.
என் பையனுக்கு மருந்தைக் கொடுத்துவிட்டு,அழைத்து வந்தேன் அடுத்த அரைமணிநேரத்தில் தண்ணீர்
வேண்டும் எனக்கேட்டான்.பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன் கால் பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டான்.வாந்தி எடுக்கவில்லை.வீடு வருவதற்குள் பசிக்கிறது என்றான்.ஓட்டலில் இரண்டு இட்லி வாங்கித் தந்தேன்.சாப்பிட்டுவிட்டான்.நான்கு நாளாக சரியாக சாப்பிடாதப் பிள்ளை சாப்பிட்டதும் எனக்கு சந்தோசம்.
பையன் முகத்தில் ஒருத் தெளிவு.
மருந் துக் கொடுத்த மூன்று மணிநேரத்திற்குள் இவ்வளவு மாற்றம்.
அன்று இரவு,மறுநாள் என பையன் உணவினை சாப்பிட ஆரம்பித்தான்.மூன்றாவது நாள் சிறுநீரின் நிறம் மாறி,ஒரு வாரத்தில் பூரணகுணமாகிவிட்டடான்.
எனக்கு ஆச்சர்யம் இன்றுவரைத்தீரவில்லை.சித்தமருந்திற்கு இவ்வளவு சக்தியா.எவ்வளவோ அபூர்வமான மருத்துவத்தை மறைத்துவைத்தே பழகிவிட்டனர்.
மருந்திற்கு வாங்கிக் கொண்டது 30ரூபாய் மட்டுமே.
பல்லாயிரம் கணக்கானோர் இன்றும் ஓரே வே ளை மருந்தில் குணமாகிச் செல்கின்றனர்.
விழுப்புரம் நகரிலிருந்து பாண்டிச் செல்லும் வழியில் 16கிமீ தூரம்
கெங்கராயம்பாளையம் உள்ளது.

Friday, February 5, 2016

காக்காய் வலிப்பு நோய்க்கு மருந்து !!!

மருந்து –ஓன்று
வசம்பு சூரணம்
வசம்பு ......இருபது கிராம்
சுக்கு .....பத்து கிராம்
மிளகு.......... பத்து கிராம்
திப்பிலி ...... பத்து கிராம்
கடுக்காய் .. பத்து கிராம்
பெருங்காயம் .......... பத்து கிராம்
உப்பு ..............கால் தேக்கரண்டி
அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து சூரணமாக்கி வைத்துக் கொள்ளவும்
இந்த வசம்பு சூரணத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து
அளவு தேனில் கலந்து குழைத்து
தினமும் ஒருவேளை
உணவு உண்டு ஒரு மணி நேரத்திற்குப் பின்
சாப்பிட்டு வர
படிப்படியாக நோய் கட்டுக்குள் வந்து
இருபத்தி நான்கு நாட்கள்
அதாவது அரை மண்டலத்தில்
முழுமையான குணம் அடையலாம்
குறிப்பு
நாட்டு மருந்துக் கடைகளில் வசம்பு தூள் கிடைக்கிறது
சுக்கு மிளகு திப்பிலி தூள் சம அளவு கலந்து திரிகடுகு சூரணம் என்ற பெயரில் கிடைக்கிறது
கொட்டை நீக்கிய கடுக்காய் தூள் கிடைக்கிறது
அதை வாங்கி வந்து
வசம்பு தூள் ---இருபது கிராம்
திரிகடுகு சூரணம் ..முப்பது கிராம்
கடுக்காய் தூள் .. பத்து கிராம்
பெருங்காயம் தூள் .......... பத்து கிராம்
உப்பு ..............கால் தேக்கரண்டி
ஆகியவற்றைக் கலந்து சூரணம் ஆக செய்து வைத்துக் கொள்ளலாம்

மருந்து..இரண்டு
வசம்பு தூள்
வல்லாரைத் தூள்
வெந்தயம் அரைத்த பொடி
கஸ்தூரி மஞ்சள் தூள்
திப்பில் பொடி
ஆகிய ஐந்து பொடிகளையும்
சம அளவு
ஒன்றாகக் கலந்து
சூரணமாக்கி வைத்துக் கொண்டு
இந்த சூரணத்தில்
ஒரு விரற்கடை அளவு எடுத்து
தேனில் குழைத்து
தினம்
காலை
மாலை
இரண்டு வேளையும்
சாப்பிட்டுவர
வலிப்பு நோய்
அதனால் ஏற்படும் காய்ச்சல்
உடல் சூடாகுதல்
தலைவலி
ஆகிய பக்க விளைவுகளும் சரியாகி
நோய் முழுமையாக குணமாகும்
மருந்து மூன்று
மேற்கூறிய மருந்துகளுக்கு துணை உணவாக
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை
கீழ்க்கண்ட பாசிப் பயறு கசாயம் குடித்து வரலாம்
நூறு மில்லி கொதிக்கும் நீரில்
பாசிப் பயறு ( தோலுடன் ) ஒரு தேக்கரண்டி
சோம்பு என்ற பெருஞ்சீரகம் அரை தேக்கரண்டி
மல்லித் தழை ஐந்து கிராம்
போட்டு
நன்கு கொதிக்க விட்டு
ஐம்பது மில்லியாக சுருங்கிய தீநீராக்கி
இறக்கி
வடிகட்டி
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை குடித்து வர
நரம்புத் தளர்ச்சி நீங்கும்
இது கை கண்ட எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்
-நன்றி,தகவல்.திரு.பொன்தங்கராஜ்